சினிமா

‘செக்க சிவந்த வானம்’ படத்தில் ஜோதிகா யாருக்கு ஜோடி?

webteam

நடிகை ஜோதிகா நடித்து வரும் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் யாருக்கு ஜோடியாக உள்ளார் என்பது குறித்து தகவல் தெரிய வந்துள்ளது.

மணிரத்னம் ‘செக்க சிவந்த வானம்’ படத்தை இயக்கி வருகிறார். அதில் பல நடிகர்கள் நடிக்கின்றனர். பொதுவாக ஒற்றை ஜோடியை வைத்து கதை சொல்வதை வழக்கமாக வைத்திருந்த மணிரத்னம் இந்த முறை பல நடிகர்களை தன் படத்தில் பயன்படுத்த தொடங்கி இருக்கிறார். இந்தப் படத்தில் சிம்பு, அரவிந்த் சாமி, விஜய்சேதுபதி என பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் நடிப்பதற்கு நடிகை ஜோதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் யாருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்பது குறித்த ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. அவர் இந்தப் படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தெரிகிறது. 

தமிழ்த்திரை உலகம் தற்சமயம் வேலை நிறுத்தத்தை கடைப்பிடித்து வருவதால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது. நிலமை சுமூகமான பிற்பாடு ஜோதிகா, அரவிந்த் சாமி நடிக்க உள்ள காட்சிகளை வழக்கம் போல் வட இந்தியாவின் பல பகுதிகளில் படக்குழு மேற்கொள்ள இருக்கிறது.