சினிமா

''மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வேண்டாம்; சாதாரண போன் போதும்'' - நடிகர் விவேக்

''மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வேண்டாம்; சாதாரண போன் போதும்'' - நடிகர் விவேக்

webteam

பெற்றோர் தங்கள் மகன், மகளுக்கு சாதாரண போன் கொடுத்தால் போதும் என நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்துக்கு முக்கிய காரணமே ஃபேஸ்புக் எனக் கூறப்படுகிறது. ஃபேஸ்புக் மூலமே குற்றவாளிகள் பெண்களுடன் அறிமுகம் ஆனதாகவும், அந்த அறிமுகமே அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு வழிவகுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்துக்கு பிறகு பலரும் ஸ்மார்ட்போன் உலகம் குறித்தும், சமூக வலைதள பயன்பாடு குறித்தும் பேசி வருகிறார்கள். வழக்கு ஒன்றில் சமீபத்தில் கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, 'செல்போன்கள், கையில் இருக்கும் அணுகுண்டைப் போல பேராபத்தானவை' என்று தெரிவித்தது.

இந்நிலையில் செல்போன் பயன்பாடு குறித்து நடிகர் விவேக் பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர்‌ பக்கத்தில் பதிவிட்டுள்‌ள அவர், ''மாணவர்களுக்கு பெற்றோர் வாங்கி தரும் ஸ்மார்ட் செல்போனில் உள்ள கேமரா மற்றும் நெட் வசதி ஆபத்தாக முடிகிறது என்றும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சாதாரண போன் வாங்கி கொடுத்தால் போதும்'' என தெரிவித்துள்ளார். 

முன்னதாக மற்றொரு ட்வீட் செய்துள்ள நடிகர் விவேக்,  ''ஜப்பானில் வாரம் இரு நாட்கள் “ internet fasting” அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த இரு நாட்களில் இளைய சமுதாயம், நெட் பக்கம் போகாமல் பெற்றோர், நண்பர்கள், விளையாட்டு, இயற்கை என்று இருக்க வேண்டுமாம்'' என்று தெரிவித்துள்ளார்.