தான் நடிக்க வருவதை அவரது தாய் ஸ்ரீதேவி விரும்பவில்லை என அவரது மகள் ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜன்வி கபூரின் புகைப்படம் ஒன்று வாக் ஃபேஷன் பத்திரிகையின் அட்டையில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளது. ஜூன் மாதம் வெளியாக இருக்கும் பிரதியில் அவரது புகைப்படம் இடம்பெற்றுள்ளது. வாக் பத்திரிகையில் ஜான்வியின் பேட்டியும் வெளியாகியுள்ளது.
ஜான்வி கபூரை பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான கரன் ஜோஹர் பேட்டி கண்டுள்ளார். அந்தப் பேட்டியில் தான் நடிக்க வருவதை அவரது தாய் ஸ்ரீதேவி விரும்பவில்லை என்பதை குறிப்பிட்டுள்ளார். தனது முதல் படமான‘தடக்’படத்தின் 25 நிமிட காட்சிகளை தாய் ஸ்ரீதேவி பார்த்துவிட்டு மேக் அப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியதாக ஜானவி கபூர் நினைவுகூர்ந்துள்ளார்.