பிரபல பாப் பாடகியும் நடிகையுமான ஜெனிபர் லோபஸ், பேஸ்பால் வீரர் அலெக்ஸ் ரோட்ரிகியூஸை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இது, அவருக்கு 4-வது திருமணம்.
பிரபல பாடகி ஜெனிபர் லோபஸ். இவர், அனகோண்டா, பிளட் அண்ட் வைன், மெய்ட் இன் மான்ஹாட்டன், ஐஸ் ஏஜ்: கான்டினென்டல் ட்ரிப்ட், பார்க்கர், த பாய் நெக்ஸ்ட் டோர், ஐஸ் ஏஜ்: கொலிஷன் கோர்ஸ் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். ஏராளமான பாப் ஆல்பங் களையும் வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட இவருக்கு இப்போது 49 வயது!
இவர், 1997 ஆம் ஆண்டு ஓஜானி நோவா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்றார். பின்னர் நடிகரும் நடன இயக்குனருமான கிறிஸ் ஜூட் என்பவரை 2001-ல் திருமணம் செய்தார். 2003-ல் விவாகரத்து பெற்றார். பின்னர் பாடகரும் நடிகருமான மார்க் அந்தோணியைக் காதலித்து 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த திருமணம் பத்து வருடம் நீடித்தது. பின்னர் கசந்தது. 2014 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றனர்.
2 குழந்தைகளை கொண்ட ஜெனிபர், பின்னர் பேஸ்பால் வீரர் அலெக்ஸை 2017 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தார். இவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாயின. இந்நிலையில் தங்கள் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக ஜெனிபர் லோபஸ் தெரிவித் துள்ளார். அலெக்ஸ், அவருக்கு அளித்த மோதிரத்துடன் கூடிய புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அலெக்ஸூம் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். அவருக்கும் 2 குழந்தைகள் உள்ளன.