ஷாருக்கான் - வீரன் திரைப்படம் - ஜெயம் ரவி
ஷாருக்கான் - வீரன் திரைப்படம் - ஜெயம் ரவி கோப்புப்படம்
சினிமா

ஷாருக்கானுக்கு காயம்? - முதலிடத்தில் வீரன்! - 100 கோடி பட்ஜெட்டில் ஜெயம் ரவி! #CinemaRoundUp

webteam

* ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான “வீரன்” திரைப்படம் ஓடிடி தளத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது. ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் வீரன் திரைப்படம் ஜூன் 2-ஆம் வெளியானது.

இப்படத்தில் அதிரா ராஜ், முனிஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஜூன் 30-ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்படும் வரிசையில் இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Veeran movie poster

* ஜெயம் ரவியின் புதிய படத்திற்கான வேலைகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஜெயம் ரவி தற்போது இறைவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் புவனேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் பூஜை நாளை நடைபெறும் என்றும் அப்போது படத்தின் தலைப்பை அறிவிக்கப்படுமென்றும் தகவல் வெளியாகியுள்ளது.

* நடிகர் மோகனுடன் வனிதா இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கி வரும் படம் ஹரா. இப்படத்தில் நடிகர் மைக் மோகன், அவருக்கு ஜோடியாக குஷ்பு நடிக்கிறார். இந்த நிலையில் இப்படத்தில் நடிகை வனிதாவும் இணைந்துள்ளார். மோகனுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ள வனிதா, ஹரா படத்தில் மோகனுடன் இணைந்து நடிப்பதன் மூலம் தனது பல நாள் கனவு தற்போது நிறைவேறி இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

நடிகர் ஷாருக்கானுக்கு அமெரிக்காவில் நடைபெற்று வந்த படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஷாருக்கான் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் சினிமா படப்பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் ஷாருக்கானுக்கு மூக்கில் சிறிய காயம் ஏற்பட்டதாகவும், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறு அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.