முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் "தலைவி" படத்தின் ஷூட்டிங் சென்னையில் இன்று தொடங்கியுள்ளது.
ஜெயம் ரவி நடித்த 'தாம் தூம்' என்ற தமிழ் படத்தில் நடித்த பிரபல நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருகிறார். இவர் நடித்த 'குயீன்' திரைப்படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளியது.
தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகி வரும் ‘தலைவி’ படத்தை ஏ.எல். விஜய் இயக்கி வருகிறார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தலைவி உள்ளிட்ட ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் வெளியிடுவதற்கு முன்பு தன்னிடம் அனுமதி பெற வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் தலைவி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. இப்படத்தை விப்ரி என்ற நிறுவனம் தயாரிக்கிறது.