jana nayagan film ravana mavanda song release pt
சினிமா

’நாயகன் நெருப்பா, தொட்டவன் கையில கருப்பா..’ - ஜனநாயகன் ’ராவண மவன்டா’ பாடல் வெளியீடு!

ஜனநாயகன் படத்தின் நான்காவது பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

Rishan Vengai

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் 'ராவண மவன்டா' பாடல் வெளியாகி, விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடல், விஜய்க்கான மாஸ் வரிகளால் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 'தளபதியின் லாஸ்ட் டான்ஸ்' என எதிர்பார்த்திருக்கும் ரசிகர்கள், இந்த பாடலை வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.

விஜய் நடிப்பில் அவரது கடைசி படமாக உருவாகியிருக்கும் படம் `ஜனநாயகன்'. ஹெச் வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் மமிதா பைஜூ, பாபி தியோல், பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, பிரகாஷ்ராஜ் எனப் பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், படம் ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜன நாயகன் திரைபப்டம்

இப்படத்திலிருந்து தளபதி கச்சேரி, ஒரு பேரே வரலாறு, செல்ல மகளே போன்ற பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், ராவண மவன்டா என்ற டைட்டில் கொண்ட 4வது பாடல் இன்று வெளியாகியுள்ளது.

ராவண மவன் டா.. குத்துற கொம்பனும் எவன் டா!

நடிகர் விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு ஏற்கனவே அதிக எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், ஜன நாயகன் உடன் பராசக்தி க்ளாஸ் ஆகிறது என்ற தகவல் வெளியான பிறகு விஜய் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது. இந்தசூழலில் ‘தளபதியின் லாஸ்ட் டான்ஸ்’ என எதிர்ப்பார்த்திருக்கும் விஜய் ரசிகர்கள் ஒவ்வொரு அப்டேட்டையும் கொண்டாடி வருகிறார்கள்.

இந்தசூழலில் இன்று வெளியாகியிருக்கும் ராவண மவன் டா பாடல் விஜய் ரசிகர்களுக்கு வெறித்தனமான கொண்டாட்டமாக மாறியுள்ளது. இப்பாடலில் வரும் வரிகள் நடிகர் விஜயின் சமகால பிரச்னைகளுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது.

பாடலை பொறுத்தவரையில், ராவண மவன் டா, ஒத்தையில் நிக்கிற எமன் டா, அத்தனை பிம்பமும் அவன் டா, உலகாண்டவன் டா என தொடங்கும் பாடலில், போர் குணம் இருக்கா, சிகரம் கண்டவன் செருக்கா, அவன சீண்டுற கிறுக்கா, முகம் வீங்கியிருக்கா.. நாயகன் நெருப்பா, தொட்டவன் கையில கருப்பா, யாருனு கண்டதும் பொறுப்பா, அசையாதிருப்பா என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.

விஜய் ஜன நாயகன்

மேலும் வசனமா எழுதலாம், அவன் கதை அதுக்கெல்லாம் மேல, எதிரியா அனுப்புனா சிரிக்கிறான் பழகிட்டான் போல.. என்ற வரிகள் மாஸ் வரிகளாக இடம்பெற்றுள்ளன.. பாடலை விஜய் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.