செய்தியாளர் - M .மீரா
தமிழ் இசை உலகில் Music Video மூலம் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள இளம் இசைக்கலைஞர் சாய் அபயங்கரின் 6-வது Music Video ‘ரதிமா’, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், அதன் இசை, காட்சியமைப்பு மற்றும் நடனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில், இயக்குநர் அட்லீ ‘ரதிமா’ பாடலை வெகுவாகப் பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாடல் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக தெரிவித்துள்ள அட்லீ, ‘ரதிமா’ வெளியான நாள் முதல் இதுவரை 100 முறைக்கும் மேல் அந்தப் பாடலைக் கேட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் பாடலைக் கேட்கும்போது புதிய அனுபவத்தை வழங்குவதாகவும், மீண்டும் மீண்டும் கேட்கும் அளவுக்கு பாடல் தன்னை கவர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சாய் அபயங்கரை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாக கூறிய அட்லீ, ஒவ்வொரு புதிய படைப்பிலும் அவர் தன்னையே மிஞ்சும் வகையில் செயல்பட்டு வருவதாகப் பாராட்டியுள்ளார். அவரது இசையமைக்கும் திறமை மற்றும் பாடல்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் விதம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தான் சாய் அபயங்கரின் தீவிர ரசிகர் என்றும், அவரது அடுத்த பாடலுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் அட்லீ கூறியுள்ளார். தொடர்ந்து பல உயரங்களை அடைய வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ‘ரதிமா’ பாடலின் மற்றொரு முக்கிய ஈர்ப்பாக நடிகை பாக்கியஸ்ரீ போர்ஸேவின் நடனம் அமைந்துள்ளது. இசைக்கு ஏற்ற வகையில் அவரது நடன அசைவுகள் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ள நிலையில், அவரது நடிப்பையும் நடனத்தையும் அட்லீ பாராட்டியுள்ளார்.
பாடலின் ஒளிப்பதிவு, இயக்கம் மற்றும் காட்சிகள் மூலம் ஒரு கதையை நகர்த்திய விதத்திற்காகவும் படக்குழுவினருக்கு அட்லீ தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.