சினிமா

”எங்கள் இயக்குநர் தமிழ் பேசக் கற்றதுதான் கொரோனா காலத்தின் நல்ல விஷயம்” - விக்ரம் பிரபு

sharpana

’பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை வாணி போஜனை பாராட்டியிருக்கிறார் நடிகர் விக்ரம் பிரபு.

முத்தையா இயக்கத்தில் ‘புலிக்குத்தி’ பாண்டி படத்திற்குப் பிறகு நடிகர் விக்ரம் பிரபு ‘பாயும் ஒளி நீ எனக்கு’, ‘டாணாக்காரன்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துவங்கியது. விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் கார்த்திக் அத்வைத் இயக்க, மகாலட்சுமி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வில்லனாக கன்னட நடிகர் தனன்ஜெயா நடிக்கிறார்.இசையமைப்பாளர் மணி சர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விக்ரம் பிரபு,


“கொரோனா என்ற காலகட்டத்தில் ஒரு விஷயத்தை எடுத்துமுடிப்பது என்பது எவ்வளவு கஷ்டம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுவும் உச்சகட்டத்தில்தான் இந்த படம் அமைந்தது. இதில் நிறைய விஷயங்கள் நடந்தது. நல்ல விஷயம் என்னவென்றால் இயக்குனர் கார்த்திக் அப்போ பேசிய தமிழை விட இப்போது பேசிய தமிழ் நன்றாக இருந்தது. இப்போது பேசியது புரிகிறது அப்போது புரிவது ரொம்ப கஷ்டம். இதற்காக கொரோனா காலகட்டத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ரசிகர்கள் என்ன எதிர்ப்பார்ப்பார்கள் என்பதை ஒரு டைரக்டராக இல்லாமல் ஒரு ரசிகராக இருந்து பார்த்து காட்சிகளை அமைத்திருக்கிறார். அவருடன் பக்க பலமாக இருந்த கோ டைரக்டர் ஹரேந்தர் மற்றும் இயக்குனர்கள் குழுவுக்கு பாராட்டுக்கள். இதில், வாணிபோஜன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவரிடம் எப்போதும் ஒரு பாசிடிவ் எனர்ஜி இருக்கும். நிறைய பாசிடிவ் எண்ணம் கொண்டவர்கள் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள். எந்நேரமும் வாணி சிரித்த முகத்துடன் இருப்பார். அவருடைய அமைதியான முகத்தை பார்க்க நன்றாக இருக்கும்” என்று பேசியுள்ளார்.