சினிமா

‘மாஸ்டர்’ பட இணைத் தயாரிப்பாளர் வீடு, இல்லத்தில் ஐ.டி ரெய்டு

‘மாஸ்டர்’ பட இணைத் தயாரிப்பாளர் வீடு, இல்லத்தில் ஐ.டி ரெய்டு

webteam

விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ பட இணைத்தயாரிப்பாளர் லலித்குமார் வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர்
நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரங்களாக ஆண்ட்ரியா, கைதி படத்தின் வில்லன் அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப்
படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த 14ஆம் தேதி காதலர் தின பரிசாக ‘குட்டிக் கதை’ பாடல் வெளியாகி
ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

மாஸ்டர் படத்தை வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 15ஆம் தேதி சென்னையில் இருக்கும் தனியார் நட்சத்திர ஹோட்டலில் வெளியிடப்படவுள்ளதாக படக் குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

மார்ச் 15ஆம் தேதி ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவுள்ள இந்த நிலையில், படத்தின் இணைத்தயாரிப்பாளர் லலித்குமார் வீடு, அலுவலகங்களில்
வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை முதல் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாஸ்டர் பட விநியோகம் ரூ.220 கோடிக்கு நடந்ததாகவும், அதில் லலித்குமாருக்கு ரூ.50 கோடி சென்றதாகவும் தகவல் வெளியானதை அடுத்து, இந்தச் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.