சினிமா

”திரைப்படங்களில் யாரையும் தாழ்த்துவது முறையானது அல்ல” - ‘ஜெய் பீம்’ குறித்து சந்தானம்

sharpana

“யாரையும் தாழ்த்துவது முறையானது அல்ல” என்று நடிகர் சந்தானம் கூறியிருக்கிறார்.

சந்தானத்தின் ‘சபாபதி’ படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் இயக்க, சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.‘குக்வித் கோமாளி’ மூலம் கவனம் ஈர்த்த புகழ், எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். அப்பா, மகனுக்கிடையேயான பாசத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படம் வரும் நவம்பர் 19 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இந்த நிலையில், இப்படத்தையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ’ஜெய் பீம்’ படத்தின் சர்ச்சை குறித்து கேட்டபோது,

“எதை வேண்டுமென்றாலும் உயர்த்தி பேசுங்க. ஆனால், இன்னொருவரை தாழ்த்திப் பேசவேண்டாம். அதேமாதிரி, ஒரு விஷயத்தைப் பார்க்காமல் பேசுவதும் தவறுதான். முழு படத்தையும் பார்த்துவிட்டு பேசுவதுதான் சரியான முறை. நீங்கள் விமர்சனம் செய்யலாம். குறைகளைக் கேட்கலாம். தவறு என்றால் சரி செய்துகொள்ள வேண்டும்.

மக்கள் தெளிவா இருக்காங்க. என்ன மாதிரி, எந்த சமூகம், எந்த சாதியை வைத்து படம் எடுத்தாலும் மக்கள் படத்தை வந்து பார்த்து முடிச்சிட்டுப் போய்டுறாங்க. எல்லா சாதி மக்களும் ஒன்னாதான் வந்து படம் பார்க்கிறாங்க. யாரை வேண்டுமென்றாலும் உயர்த்திப் பேசுங்க. ஆனால், அடுத்தவரை தாழ்த்தி பேசவேண்டாம். அது தேவையில்லாத விஷயம்.

இளைஞர் சமூகத்துக்கு நாம நல்ல சினிமாவைத் தரணும். ரெண்டு மணிநேரம் சாதி, மதம், இனம் எல்லாத்தையும் மறந்து தியேட்டர்ல உட்கார்ந்து படம் பார்க்கிறாங்கன்னா அதுக்கான படமா இருக்கணும்” என்று கூறியிருக்கிறார்.