சினிமா

இந்திய படங்களுக்கு ஆஸ்கரை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்: அடூர் காட்டம்!

webteam

இந்திய திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருதை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது என்று பிரபல இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் கூறினார்.

அவர் மேலும் கூறும்போது, ‘ஆஸ்கர் விருது ஹாலிவுட் படங்களுக்காக உருவாக்கப்பட்டது. அது சர்வதேச விருது அல்ல. அமெரிக்க படங்கள் உலகெங்கும் வெளியிடப்பட்டு வருவதால் அந்த விருது மீது பெரிய விருப்பம் ஏற்பட்டிருக்கிறது. உலக அளவில் அவர்கள் படங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக, சில வருடங்களுக்கு முன் வெளிநாட்டு பிரிவு படங்களுக்கு விருதளிப்பதை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அந்தப் பிரிவில் இந்திய படத்துக்கு விருது கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கு முதலில் ஆஸ்கர் ஏஜென்ட்களுக்கு படத்தை திரையிட்டுக் காட்ட வேண்டும். பலமுறை திரையிட வேண்டிய வேலை இருக்கிறது. பார்ப்பவர்கள் படத்தை ஏற்று வாக்களிக்க வேண்டும். இதற்கான செலவு, ஒரு இந்திய படத்தை தயாரிக்கும் செலவுக்கு ஒப்பானது. இதற்கு ஏன் அந்த விருதை எதிர்ப்பார்க்க வேண்டும்? அப்படி எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது’ என்று அவர் கூறியுள்ளார்.