சினிமா

வரி ஏய்ப்பு: ’அம்மா’வுக்கு நோட்டீஸ்

வரி ஏய்ப்பு: ’அம்மா’வுக்கு நோட்டீஸ்

webteam

வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறி, மலையாள நடிகர் சங்கத்துக்கு (அம்மா) வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மலையாள நடிகர் சங்கத் தலைவராக இன்னொசன்ட், செயலாளராக மம்மூட்டி துணைச் செயலாளராக மோகன்லால் இருக்கின்றனர். பொருளாளர் திலீப், கைதுக்குப் பின் நீக்கப்பட்டார். நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்ட வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதுகுறித்த சரியான கணக்கு வழக்குகளை ’அம்மா’ காண்பிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.  இதையடுத்து வெளிநாடுகளில் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள் மற்றும் அதன் மூலம் கிடைத்த வருமானம், செலவு உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்யுமாறு ம‌லையாள நடிகர் சங்கத்திற்கு வருமான வரித்துறை‌ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் மலையாள சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.