நடிகர் ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் ‘காலா’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகப் பிரமாண்டமாக ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய ரஜினி, “புத்திசாலிகளோடு பழகலாம். அதிபுத்திசாலிகளோடு பழகக் கூடாது என்பதை தெரிந்து கொண்டேன்” என்று குறிப்பிட்டிருந்தார். அதோடு ‘சந்தரமுகி’படத்திற்கு பிறகு நடைப்பெறும் இசை வெளியீட்டு விழா இது என்றும் கூறியிருந்தார்.
மேலும் எனக்கு சவாலான இருந்த வில்லன்கள் ‘பாட்சா’ படத்தில் இடம்பெற்ற ஆண்டனி அடுத்து நீலாம்பரி என கூறியிருந்தார். அந்த வரிசையில் அடுத்ததாக காலாவில் நடித்த நானா படேகரும் இருப்பார் என்றார்.
அவரது வார்த்தையை மெய்யாக்கும் வகையில் நானா படேகரும் ரஜினியும் இணைந்துள்ள போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படம் தற்போது சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பரவி வருகிறது.