சினிமா

சிம்புவுக்காக நெல்சன் எழுதிய ’வேட்டை மன்னன்’ கதையில் நடிக்கிறாரா விஜய்?

சிம்புவுக்காக நெல்சன் எழுதிய ’வேட்டை மன்னன்’ கதையில் நடிக்கிறாரா விஜய்?

sharpana

சிம்புவுக்காக எழுதிய வேட்டை மன்னன் கதையில் சில மாற்றங்கள் செய்தே ‘தளபதி 65’ படக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’கோலமாவு  கோகிலா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். ஆனால், அவர் முதன் முதலில் அறிமுகமாகியிருக்கவேண்டிய படம் சிம்பு நடித்த ‘வேட்டை மன்னன்’ தான். கடந்த 2011 ஆம் ஆண்டு வேட்டை மன்னன் படத்தின் டீசரும் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆனால் அந்தப்படம் வெளியாகவில்லை.

சிம்பு துப்பாக்கியுடன் பேசும் டயலாக்குகளுடன் வந்தது அந்த டீசர். இந்நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்தினை இயக்கி முடித்துள்ள நெல்சன், ‘தளபதி 65’ படத்தினை இயக்கவுள்ளார். அதுவும், காமெடி படம் என்று சொல்லப்படுகிறது. கோலமாவு கோகிலா படத்தையும் காமெடியாகத்தான் எடுத்திருந்தார் நெல்சன் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதன், வீடியோவிலும் ’விஜய் 65’ அறிவிப்புடன் துப்பாக்கிகள்தான் பின்னணியில் வந்தன. இந்நிலையில், வேட்டை மன்னன் கதையில்தான் விஜய் நடிக்கவுள்ளார் என்றும் விஜய்க்காக நெல்சன் சில மாற்றங்களை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.