சினிமா

”முதலில் கல்வி நிறுவனங்களை மதம், சாதிகளின் பெயரால் உருவாக்கியது சரியா?” - சீனு ராமசாமி

sharpana

“முதலில் கல்வி நிறுவனங்களை மதங்களின் சாதிகளின் பெயரால் உருவாக்கியது சரியா” என்று கேள்வி எழுப்பியுள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.

கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர கல்லூரி அனுமதி மறுத்த விவகாரம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, நேற்று கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவியை சூழ்ந்து ‘ஜெய் ஸ்ரீராம் ‘ கோஷம் எழுப்பியவர்களின் வீடியோ இந்தியா முழுக்க வைரலாகி மாணவிக்கு ஆதரவுக் குரல்களை குவித்துக்கொண்டிருக்கிறது.

இந்த சம்பவத்தை கண்டித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவில் மாணவியின் புகைப்படத்தைப் பகிர்ந்து, “உனது உடை, உனது மொழி, உனது கடவுள், உனது உரிமை, உனது இந்தியா, நம் தாய்நாடு” என்றும் இந்தியா ”மதச்சார்பற்ற நாடா? அல்லது மதசகிப்பு தன்மை கொண்ட நாடா? இந்திய அரசியல் சாசனம் என்ன சொல்கிறது? முதலில் கல்வி நிறுவனங்கள் யாவும் மதங்கள் ஜாதிகளின் பெயரால் உருவாக்கியது சரியா? காலை பள்ளி அசெம்பிளியில் தேசிய கீதம் & தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் ஒலிக்குமா?” என்று மாணவிக்கு ஆதரவாக பதிவிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.