செய்தியாளர்: வெற்றிச்செல்வி
தமிழ் சினிமா, காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றி கொண்டிருக்கிறது.. அதில் குறிப்பிடத்தக்க ஒரு மாற்றம், நடிகர்களை தேர்வு செய்வது. சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் Influencers-ஐ நோக்கி தமிழ் சினிமா நகர்ந்துகொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே சினிமா மிகவும் வசீகரமான ஒரு துறையாக இருந்து வருகிறது.. மற்ற துறைகளுக்கு இருக்கும் போட்டிகளைவிட இங்கு பல மடங்கு போட்டி உள்ளது.
தமிழ் சினிமாவின் casting, நாடகங்களில் தொடங்கி இன்று சோசியல் மீடியா வரைக்கும் பல்வேறு பரிணாமங்களை கடந்து வந்திருக்கிறது. முன்பு எண்ணிலடங்காத audition, photoshoots, Screen Test, reccomandation என சினிமா கடினமாகவும் கண்ணுக்கு எட்டாத தூரத்திலும் இருந்து வந்தது. படத்தில் நடிக்க வாய்ப்பு தேடுபவர்களுக்கு சினிமா எங்கு இருக்கிறது யாரை அணுக வேண்டும் என்ற ஐடியாவே இருக்காது.
ஆனால் இன்று கையில் வைத்திருக்கும் மொபைல் போனை கொண்டு சினிமாவை தன் வசப்படுத்தி கொண்டனர் instagram influencergal மற்றும் கன்ட்னட் creators.. ஏதோ ஒரு இடத்தில ஊரில் கிராமத்தில் இருந்து கொண்டு தங்களுக்குரிய தனித்துவமான பானியில் சோசியல் மீடியாக்கள் மூலம் தங்களின் திறமையை வெளிப்படுத்துகின்றனர்.. இதன்மூலம் அவர்களுக்கென தனி followers பட்டாளத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
இப்படி சமூக வலைத்தளங்களில் தங்களுக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்களை தற்போது சினிமா துறையும் கவனிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே ரசிகர்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் இவர்களைத் திரைப்படங்களில் நடிக்க வைப்பதன் மூலம் நடிப்புத் திறமையுடன் படத்திற்கான விளம்பரமும் கிடைக்கும் என தயாரிப்பாளர்கள் கணக்குப் போடுகின்றனர்..
இதற்கு உதாரணமாக நடன வீடியோக்கள் மூலம் இன்ஸ்டகிராமில் பிரபலமான ரம்யா ரங்கநாதன், இயக்குநர் தனுஷின் கவனத்தை பெற்று, ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார். தற்போது பல்வேறு படங்களில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதேபோல், VJ சித்து வி-லாக்ஸ் மூலம் பிரபலமான ஹர்ஷத் கான், பாபா பிளாக் ஷீப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் ’டிராகன்’ படத்தில் குட்டி டிராகனாக நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றார். மேலும் அதே குழுவில் இருக்கும் vj சித்தும் தற்போது ’டயங்கரம்’ படம் மூலம் இயக்குநகராகவும், நடிகராகவும் களமிறங்க உள்ளார்.
’பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிய கோபி, சுதாகர் இருவரும் சினிமாவிலும் தடம் பதித்துள்ளனர்.
அதே பரிதாபங்கள் யூடியூப் வீடியோக்களில் மூலம் பிரபலமான டிராவிட்டும் தற்போது ’டியூட்’ படத்தில் பிரதீப் ரங்கநாதனின் நண்பராக நடித்து வெள்ளித்திரையில் கவனம் பெற்றார். இப்படி instgram youtube மூலம் பல நடிகர்கள் சினிமாவிற்கும் நுழைகின்றனர். சினிமாவில் வாய்ப்பு தேடிய காலம் போய் சினிமா நடிகர்களே தங்களுடைய படத்தின் promotions க்கு influender களை நாட வேண்டிய தேவை வந்துவிட்டது.