கேஜிஎப் படம் மூலமாக பிரபலமடைந்த நடிகர் யஷ், அவரது மகனின் ஒன்றாவது பிறந்தாள் விழா வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கேஜிஎப் படத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் கவனம் ஈர்த்தவர் கன்னட நடிகர் யஷ். தெலுங்கு, கன்னடம் மட்டுமல்லாது பல மொழிகளிலும் கவனம் ஈர்த்த இத்திரைப்படத்திற்கு தனி ரசிகர் பட்டளாமே உள்ளது. நடிகர்கள் சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் போஸ்டர் அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் யஷ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மகனின் பெயர் வைபவ வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்நிகழ்வில் யஷ் அவரது மனைவி ராதிகா பண்டிட் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
யஷ் வெளியிட்டுள்ள வீடியோவில் “ யஷ், மகள் அயிராவுடனும், ராதிகா பண்டிட் மகன் யதர்வாவுடனும் உள்ளனர். யதர்வ் மஞ்சள் நிற சட்டையையும், வேட்டியையும் கட்டிருந்தார். தொடர்ந்து அவர், தாத்தா மற்றும் பாட்டியுடன் விளையாடினார். இதனைத் தொடர்ந்து பெயர் வைப சடங்குகள் நடைபெற்றது. இறுதியில் யஷ் தனது மகளை தம்பியின் பெயரைக் கூறச் சொல்லிக் கேட்க, அவர் யதர்வ் என்று அழைத்தார். இதன் மூலம் குட்டி யஷ்ஷின் பெயர் யதர்வ் என்பது தெரிய வந்துள்ளது. யஷ் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.