சினிமா

ஆஸ்கர் வெல்லும் வாய்ப்பை 'மிஸ்' செய்த இந்திய ஆவணப்படம்!

EllusamyKarthik

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் 2022 விருது விழா நடைபெற்றது. இதில் சிறந்த நடிப்பு, சிறந்த இயக்கம், சிறந்த இசை என பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் சிறந்த ஆவணப்படத்திற்கான (Feature) அகாடமி விருதுக்கான இறுதிப் பரிந்துரை பட்டியலில் இந்திய ஆவணப்படமான 'ரைட்டிங் வித் ஃபயர்' இடம் பெற்றிருந்தது. 

இதில் இந்திய பட்டியலினப் பெண்களால் நடத்தப்படும் 'கபர் லெஹ்ரியா' என்ற பத்திரிகையின் கதை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை ரிந்து தாமஸ் மற்றும் சுஷ்மித் கோஷ் இயக்கி இருந்தனர். 

இந்நிலையில் இந்த ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வெல்லும் வாய்ப்பை ‘ஜஸ்ட் மிஸ்’ செய்துள்ளது. இந்த பிரிவுக்கான பட்டியலில் இடம் பிடித்திருந்த ‘Summer of Soul’ ஆஸ்கர் விருதை  வென்றுள்ளது. இந்த 1969 ஹார்லெம் கலாச்சார விழா குறித்த ஆராய்வாக எடுக்கப்பட்டிருந்தது. 

கடைசியாக இந்தியர் ஆஸ்கர் விருதை வென்றது எப்போது?

கடைசியாக கடந்த 2009-இல் இந்தியா சார்பில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படக்குழுவினர் ஆஸ்கர் விருது வென்றிருந்தனர். அப்போது இசை தமிழர் ஏ.ஆர்.ரஹ்மான் விருதை வென்றிருந்தார். அதே போல கடைசியாக இந்திய நாட்டின் சார்பில் கடந்த 2013-இல் ‘லைஃப் ஆப் பை’ திரைப்படத்தில் இடம் பெற்ற தாலாட்டு பாடலுக்காக பாம்பே ஜெயஸ்ரீ சிறந்த (ஒரிஜினல்) பாட்டிற்கான அகாடமி விருது பரிந்துரையில் இடம் பெற்றிருந்தார்.