தனி இசைப்பாடல்களுக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புள்ளதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் 'எண்ணம்போல் வாழ்க்கை' என்ற தனி இசை பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலை U1 Records நிறுவனம் மூலம் யுவன் சங்கர் ராஜா வெளியிடுகிறார். இது குறித்து புதிய தலைமுறையிடம் பேசியவர் யுவன் ஷங்கர் ராஜா தனி இசை பாடல்கள் தமிழகத்தில் வளர்ச்சி அடைந்து வருவதாக கூறினார்.
மேலும், வலிமை திரைப்படத்தின் பாடலுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது என யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார்.