தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்தின் வங்கிகணக்கிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளில் ரூபாய் 50 கோடி பணம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மும்பை போலீஸ் இந்த கோணத்தில் விசாரிக்கவில்லை என்று பீகார் காவல்துறை டிஜிபி கூறியுள்ளார்.
இதுபற்றி கூறிய பீகாரின் டிஜிபி குப்தேஸ்வர் பாண்டே"கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 50 கோடி ரூபாய் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது, ஆனால் ஆச்சரியப்படும் விதமாக அவை அனைத்தும் திரும்ப எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அவரது கணக்கில் 17 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது, அதில் 15 கோடி ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இது விசாரிக்கப்பட வேண்டிய முக்கியமான விடயம்” என்று தெரிவித்தார். மேலும் மும்பை காவல்துறை தங்களுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.