சினிமா

இம்சை அரசனால் படக்குழுவுக்கு இம்சை எனப் புகார்

இம்சை அரசனால் படக்குழுவுக்கு இம்சை எனப் புகார்

webteam

இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படப்பிடிப்பிற்கு கடந்த சில நாட்களாக வரவில்லை என இயக்குநர் சங்கர் அளித்த புகாரின்பேரில், தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் கேட்டு நடிகர் வடிவேலுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. 

வடிவேலு நடிப்பில் உருவாகி வரும் படம்  இம்சை அரசன் 24ஆம் புலிகேசி. இப்படத்தில், தனக்கு பிடித்த ஆடை வடிவமைப்பாளரை பயன்படுத்த வேண்டும் என வடிவேலு கூறியதாகவும், அதற்கு படக்குழுவினர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதனால், வடிவேலு கடந்த சில நாட்களாக படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இருக்கிறார். பெரும் பொருட்செலவில் அரங்குகள் அமைத்து படபிடிப்பு நடத்தப்பட்டு வரும் நிலையில், வடிவேலு வராததால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் இயக்குநர் சங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். அதேபோல், சாமி 2 படத்திலிருந்து விலகுவதாக அறிவித்த நடிகை த்ரிஷாவிற்கும் தயாரிப்பாளர் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.