சினிமா

விஜய்க்கு போட்டியாக டான்ஸ் ஆடுவேன்: இமான் அண்ணாச்சி சேட்டை

விஜய்க்கு போட்டியாக டான்ஸ் ஆடுவேன்: இமான் அண்ணாச்சி சேட்டை

webteam

சமூக போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை குறித்து தயராகி வரும் படத்தில், இமான் அண்ணாச்சி நடனமாடி கலக்கியிருக்கிறார். 
 
இந்தப் படத்தில் நகைச்சுவையான அரசியல்வாதியாக இமான் அண்ணாச்சி நடிக்கிறார். இதில் வரும் ஒரு பாடலை  கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார். இந்த பாடலில்  சசிரேகா என்ற நடிகையுடன் இமான் அண்ணாச்சி நடனமாடியுள்ளார். அண்ணாச்சியின் நடனத்தை பார்த்து  படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரும் இனிமேல் நடனப்புயல் பிரபுதேவாவும், ராகவா லாரன்ஸும் இமான் அண்ணாச்சியிடம் நடனம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கிண்டலாக பேசி உள்ளனர். 

இது குறித்து இமான் அண்ணாச்சி, “எனக்குள் இப்படி ஒரு நடனத்திறமை இருப்பதை இப்போதுதான் நான் புரிந்துகொண்டேன். இந்தப் படத்தின் காட்சிகளிலும், பாடலிலும் என்னை இயக்குனர் மிக அட்டகாசமாக பயன்படுத்தி இருக்கிறார். இனிவரும் படங்களில் இளைய தளபதி விஜய்க்கும், சிவகார்த்திகேயனுக்கும்  நடனத்தில் போட்டிபோட முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது” என்றார். இப்பாடலுக்கு நடன பயிற்சி அளித்தவர் கும்கி, கயல், ஆர்யா-2, பஜ்ரங்கி பாய்ஜான்  போன்ற படங்களுக்கு நடனம் அமைத்த நோபில் என்பது குறிப்பிடத்தக்கது.