சினிமா

இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு கட்டடம் கட்டும் பொறுப்பை ஏற்கிறேன் - இளையராஜா

இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு கட்டடம் கட்டும் பொறுப்பை ஏற்கிறேன் - இளையராஜா

webteam


இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு கட்டடம் கட்டும் பொறுப்பை ஏற்பதாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா நேற்று தனது 76ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். இசை ரசிகர்கள் இளையராஜாவுக்கு நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்துகளை தெரிவித்தனர். நேற்று காலை ரசிகர்களுடனான சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா, வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி கூறினார். மேலும் இசை நிகழ்ச்சியில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதன்படி நேற்று மாலை சென்னையில் 'இசை கொண்டாடும் இசை' என்ற பெயரில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நடிகர் கமல்ஹா‌சன், பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், கே.ஜே.ஜேசுதாஸ், மனோ, இசையமைப்பாளர்கள் தீனா, எஸ்.ஏ.ராஜ்குமார், ஸ்ரீகாந்த்‌ தேவா, பரத்வாஜ், தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

விழாவில், பல்வேறு காலகட்டங்களில் இசை அமைத்த பாடல்களை பாடி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் இளையராஜா. அப்போது பேசிய அவர் பல சுவாரசிய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். 

பின்னர் இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு கட்டடம் கட்டும் பொறுப்பை தாம் ஏற்பதாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார். அதற்கு நிதி திரட்டும் விதமாக பல இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.