சினிமா

எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குப் பதிவு செய்யலாம்: உயர்நீதிமன்றம்

rajakannan

திரைப்பட இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திருப்பதி கோயிலுக்கு செலுத்தப்படும் காணிக்கையும் லஞ்சம்தான் என எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாக இந்து முன்னணி அமைப்பின் நாராயணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததாகவும் ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தமது மனுவில் நாராயணன் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.என்.ரமேஷ், எஸ்.ஏ.சந்திரசேகர் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்று காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார்.

கடந்த மாதம் விசிறி பட விழாவில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், “நாட்டில் லஞ்ச இல்லாமல் எதுவும் நடைபெறாத நிலை உள்ளது. கடவுளேக்கு லஞ்சம் தர வேண்டியுள்ளது. திருப்பதி கோயில் உண்டியலில் பணம் போடுவதும் ஒருவகையில் லஞ்சாம் தான். உண்டியலில் பணம் போட்டால் மாணவர்கள் பாஸ் பண்ணிவிட முடியுமா? அப்படி என்றால் யாருமே பள்ளிக்கு போகதேவையில்லை. வீட்டிலே இருந்து கொள்ளலாம். படிக்கணும், உழைக்கணும், நல்லது செய்யணும், நல்லது நினைக்கணும், மனதார பேசணும்” என்று பேசியிருந்தார்.