சினிமா

’நீதி வேண்டும்’: பிஷப்புக்கு எதிரான போராட்டத்துக்கு மஞ்சுவாரியர் ஆதரவு!

webteam

பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பிஷப் கைதுசெய்யப்படும் வரை, அவருக்கு எதிராக போராடும் கன்னியாஸ்திரிகளுக்கு ஆதரவாக இருப்பேன் என்று நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில், பிராங்கோ முல்லக்கால் என்பவர் பிஷப்பாக இருக்கி றார். இவர், அங்கு பணிபுரியும் கன்னியாஸ்திரியை, 2014 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் 13 முறை பாலியல் வன்கொடுமை செய்த தாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பிராங்கோ மீது தேவாலய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசாரும் நடவடிக் கை எடுக்கவில்லை எனக் கூறி கன்னியாஸ்திரிகள் ஐந்து பேர் போராட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த விவகாரத்தில் வாடிகன் திருச்சபை தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாஸ்திரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.  

இந்நிலையில் கன்னியாஸ்திரிகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு பெருகுகிறது. சினிமா துறையினரும் போராட்டம் நடத்தும் கன்னியாஸ்திரிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகைகள் ரீமா கல்லிங்கல், பார்வதி ஆகியோர் தொடர்ந்து ஆதரவாக பேசி வந்த நிலையில் நடிகை மஞ்சு வாரியரும் களத்தில் குதித்துள்ளார்.

’போராட்டத்தில் ஈடுபடும் கன்னியாஸ்திரிகளுக்கு ஆதரவளிக்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர் கைது செய்யப்படுவது பாதிக்கப்பட்டவர்களுக்கு காயத்தை ஏற்படுத்தும். அதோடு தேவாலயத்தின் மீதான நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாவதாக அமையும். கிறிஸ்துவை நம்புபவர்கள் குற்றவாளிக்கு துணை போவார்கள் என்று நான் நினைக்கவில்லை. நீதி விரை வில் கிடைக்க வேண்டும். குற்றவாளி தண்டிக்கப்படும் வரை கன்னியாஸ்திரிகளின் பின்னால் நிற்பேன்’ என்று கூறியுள்ளார்.