தெலுங்கில் தனது முதல் படமான ஃபிடா வெற்றி பெற்றதில் உற்சாகத்தில் இருக்கிறார் சாய் பல்லவி. ஒரு மொழியில் வெற்றி பெற்ற படங்களை மற்றொரு மொழியில் ரீமேக் செய்தால் அந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். ‘ஒருபடத்தை ரீமேக் செய்தால் அந்தப்படம் வெற்றிபெறுமா என்பது சந்தேகம்தான். ஒரிஜினல் படத்தில் வெளிப்படுத்திய உணர்வுகளை ரீமேக் படங்களில் வெளிப்படுத்த முடியாமா எனத் தெரியவில்லை.
ஒரிஜினல் படங்களைப்போல ரீமேக் படங்களை உருவாக்க முடியாது. ஆகையால் ரீமேக் படங்களில் நான் நடிக்க மாட்டேன். இதுதொடர்பாக என்னை யாரும் அணுகவேண்டாம்’ எனத் தெரிவித்துள்ளார். சாய்பல்லவி நடித்த பிரேமம் படத்தை தமிழில் ரீமேக் செய்ய பலர் முயற்சித்தும் பலனிக்கவில்லை. அவர் நடித்த பிரேமம் படத்தில் மலர் டீச்சர் பாத்திரமும், ஃபிடாவில் பானுமதி பாத்திரமும் அனைவராலும் மறக்கமுடியாத பாத்திரமாக இடம்பெற்று விட்டது. தற்போது நானியுடன் எம்சிஏ படத்தில் நடித்து வரும் சாய்பல்லவி, ஃபிடா பட இயக்குநரின் அடுத்த படத்திலும் நடிக்க இருக்கிறார்.