பிரபலமாகாத பாடல்களை ரீ-கிரியேட் செய்து மீண்டும் பாட வேண்டும், அதுதான் என்னுடைய ஆசை என்று நடிகை ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார்.
பை.பை..பாடல் மூலம் பெரிய பாடகியாக பேசப்பட்டவர் நடிகை ரம்யா நம்பீசன். ஆனால் அவர் முறைப்படியான பாடகி இல்லை. அப்படி இருந்தும் அவர் பாண்டியநாடு படத்தில் பாடிய பாடல் மிகப் பிரமலமடைந்தது. அவர் இப்போது சத்யன் படத்தில் யாவனா பாடலை படியிருக்கிறார். அந்த அனுபவம் பற்றி பேசிய அவர், நான் இப்போதுதான் பாடக் கற்றுக் கொண்டிருக்கிறேன். பாடல் துறையில் நான் ஒரு வளர்ந்து வரும் குழந்தை. இதுவரை மலையாளத்தில் 20 பாடல்களை பாடி இருக்கிறேன். பிரபலமாகாத பாடல்களை மீண்டும் ரீ-கிரியேட் செய்து என் ஸ்டைலில் பாட வேண்டும். அதான் என் ஆசை என்று குறிப்பிட்டுள்ளார்.