சினிமா

கதாநாயகியாக இருக்கவே விரும்புகிறேன்; காஜல் கருத்து

கதாநாயகியாக இருக்கவே விரும்புகிறேன்; காஜல் கருத்து

webteam

கதாநாயகியாகவே இருக்க விரும்புகிறேன். கதையின் நாயகியாக இருக்க விருப்பம் இல்லை என காஜல் கூறியுள்ளார்.

ஜோதிகா போன்ற நடிகைகள் கதைக்கு முக்கியத்துவம் உடைய படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்கள். நீங்களும் அப்படி நடிப்பீர்களா? என கேட்டதற்குதான் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

தெலுங்கில் ‘கைதி நெ.150’ ‘நெனோ ராஜூ நெனோ மந்திரா’ ஆகிய  இரண்டு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில்‘‘கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் அளவுக்கு எனக்கு இன்னும் வயதாகவில்லை. அதற்கான காலம் வரும்போது அப்படி நடிப்பேன். இப்போதைக்கு இளமையான ஹீரோயினாக நடிக்கவே ஆசைப்படுகிறேன். பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து இரண்டு கேரக்டர் ரோல் என்னைத் தேடி வந்தது. ஆனால் நான் மறுத்துவிட்டேன்” எனக் கூறியிருக்கிறார். இரண்டு படங்களை அவர் நிராகரித்ததன் மூலம் 5 கோடிக்கு மேல் அவர் இழந்திருக்கிறார் என கணக்குப் போட்டு சொல்கின்றனர் திரைத்துறையினர்.