சினிமா

”விஜய்யுடன் நடிக்க விரும்புகிறேன்” - கங்கனா ரனாவத்

sharpana

”நடிகர் விஜய்யுடன் நடிக்க விரும்புகிறேன்” என்று கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தை ஏ.எல் விஜய் இயக்கி முடித்துள்ளார். நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாகவும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமியும் நடித்திருக்கிறார்கள்.தமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ’தலைவி’ வெளியாகும் என்று அறிவித்த படக்குழு, பின்பு கொரோனாவால் படத்தை இப்போதைக்கு வெளியிட முடியாது என்று விளக்கம் கொடுத்தது.இந்நிலையில் திரையரங்குகளை திறக்க தற்போது அனுமதி கிடைத்துள்ளதால், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ’தலைவி’ நாளை வெளியாகிறது.

படத்தின் புரொமொஷனுக்காக சென்னை வந்திருந்த கங்கனா ரனாவத் தனியார் இணையதளத்திற்கு அளித்தப் பேட்டியில், ”தமிழ் நடிகர்களில் யாருடன் நடிக்க விரும்புகிறீர்கள்? யார் உங்கள் நினைவுக்கு வருகிறார்கள்” என்று தொகுப்பாளர் கேட்க உடனடியாக கங்கனா “அஃப்கோர்ஸ் விஜய் சார்தான். விஜய் சார் அல்டிமேட். அவருடன் நடிக்க விரும்புகிறேன். அதேபோல், ரஜினி சாருடணும் பணியாற்ற விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.