இயக்குனர் மிஷ்கினின் ஸ்டைல் பிடித்திருக்கிறது என்று நடிகை அதிதி ராவ் ஹைதரி தெரிவித்துள்ளார்.
தமிழில் மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ படத்தில் நடித்தவர் இந்தி நடிகை அதிதி ராவ் ஹைதரி. இப்போது ’செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து மிஷ்கின் இயக்கும் படத்தில் நடிக்கிறார் அதிதி. இதில் உதயநிதி ஹீரோவாக நடிக்கிறார்.
இதுபற்றி அதிதி ராவ் கூறும்போது, ‘ மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பது உண்மைதான். ஆனால், படத்தின் கதை உள்ளிட்ட விஷயங்கள் பற்றி இப்போதே எதுவும் கூற இயலாது. ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. மிஷ்கினின் மேக்கிங் ஸ்டைல் எனக்குப் பிடித்திருக்கிறது. ஒரு நடிகையாக அந்த ஸ்டைல் அர்த்தமுள்ளதாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. கேரக்டரை அவர் விளக்கும் விதம் அற்புதம்.
அவருடன் ஸ்கிரிப்ட் ரீடிங் பயிற்சியில் ஈடுபட்டேன். அவரது இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். ஷூட்டிங்கை எதிர்பார்த்து காத்தி ருக்கிறேன். அது சவாலானது. ஆனால் ஜாலியானது’ என்கிறார் அதிதி