மீ டூ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகை ஹூமா குரேஷி, அதேசமயம் தான் ஆண்களுக்கு எதிரானவள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானர் நடிகை ஹூமா குரேஷி. தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான ‘காலா’ படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் மீ டூ குறித்து ஹூமா குரேஷி தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹூமா குரேஷி, என்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை மீ டூ இயக்கத்திற்கு எனது ஆதரவு நிலைப்பாட்டை தெரிவிப்பேன். அதேசமயம் நான் ஆண்கள் சமுதாயத்திற்கு எதிரானவள் இல்லை என தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே மீ டூ இயக்கம் இந்தியாவிலும் பிரபலம் அடைந்து வருகிறது. மீ டூ என்கிற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் சினிமா பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் என பலதரப்பு பெண்களும் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களை பதிவு செய்து வருகின்றனர். இதற்கு பல தரப்பில் இருந்து ஆதரவு தெரிவித்து பெருகி வரும் நிலையில் ஹூமா குரேஷியும் தனது ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.