சினிமா

"எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதாவின் அரசியல் அழைப்பை மறுத்தேன்" - இயக்குநர் பாரதிராஜா

Veeramani

எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் தன்னை அரசியலுக்கு அழைத்ததாகவும், ஆனால் அந்த அழைப்புகளை மறுத்துவிட்டதாகவும் பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் சுற்றுலா, கலாசாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராகியுள்ள நடிகை ரோஜாவுக்கு, தென்னிந்திய திரையுலகம் சார்பில், வரும் ஏழாம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

இதுகுறித்து சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் இயக்குநர்கள் பாரதிராஜா, ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே.செல்வமணி, சித்ரா லட்சுமணன், இசையமைப்பாளர் தினா உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பாரதிராஜா, ரோஜா மிகவும் துணிச்சலானவர் என்றும், தமிழ்நாட்டு மருமகள் என்றும் குறிப்பிட்டார்.



ஆந்திரா ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் 2009ல் இணைந்த நடிகை ரோஜா, 2014 ஆம் ஆண்டு தேர்தலில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி சிறப்பாக செயல்பட்டார். அதனை தொடர்ந்து 2019 தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றார், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைத்தது. ஆனால் அவருக்கு அப்போது அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை, இந்த சூழலில் தற்போது உருவாக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் ரோஜா அமைச்சராகியுள்ளார்.

இதையும் படிக்க:சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு’: மனதை மெல்ட் ஆக்கவரும் ஏ.ஆர் ரஹ்மானின் மெலடி!