சினிமா

இனி படங்கள் இயக்கவே மாட்டேன்... அஜீத் பட இயக்குநர் திட்டவட்டம் !

இனி படங்கள் இயக்கவே மாட்டேன்... அஜீத் பட இயக்குநர் திட்டவட்டம் !

webteam

நடன இயக்குநரான ராஜூ சுந்தரம் இனி படங்களை  இயக்கபோவதில்லை எனத் தெரிவித்துள்ளார். 


அஜீத் நடிப்பில் ஏகன் படத்தை இயக்கி இருந்தார்.  இந்நிலையில் ‘யானும் தீயவன்’ பட விழாவில் பேசிய  அவர், இந்தப்படத்தை இயக்க என்னைத் தான் அனுகினர்.  நான் மறுத்து விட்டேன். அஜீத் நடித்த நான் இயக்கிய ஏகன்  படம் ஒழுங்காக ஓடவில்லை. அதனால் இனி படம்  இயக்கக்கூடாது என ஒதுங்கி விட்டேன்.  இயக்குநராக  பிரபுதேவா வெற்றிகரமாக வலம் வருகிறார்.  அவர்  கடுமையான உழைப்பாளி. அப்படியிருக்க என்னால்  முடியவில்லை.  இயக்கம் என்பது கடினமான வேலை.  ஆகையால் நடனத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்தி  வருகிறேன். அதற்கே எப்போதும் முக்கியத்துவம் அளித்து  வருகிறேன். ஏகன் படத்திற்காக முழுக்கவனம் செலுத்தி  கடுமையாக உழைத்தேன். ஆனாலும் அந்தப்படம் தோல்வி  அடைந்து விட்டது. ஆகையால், பொய் சொல்லவில்லை.  தமிழில் படம் இயக்குவதைவிட நேர்மையாக ஒதுங்கொள்ள  முடிவெடுத்து விட்டேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.