சினிமா

தோனி குமார், ரஜினி ராதா... இது ’பக்கா’ ஆட்டம்

தோனி குமார், ரஜினி ராதா... இது ’பக்கா’ ஆட்டம்

webteam

பென் கண்ஸ்டோரிடியம் என்ற பட நிறுவனம் மூலம் ’அதிபர்’ படத்தை தயாரித்த, டி.சிவகுமார் அடுத்து தயாரிக்கும் படம், ’பக்கா’.

விக்ரம் பிரபு ஹீரோ. ஹீரோயின்களாக நிக்கி கல்ராணி, பிந்து மாதவி நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா உட்பட பலர் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் சிவகுமார் நடிக்கிறார். ஒளிப்பதிவு, எஸ்.சரவணன். இசை சி. சத்யா.  எஸ்.எஸ்.சூர்யா, இயக்கியுள்ளார். 
படம் பற்றி விக்ரம் பிரபு கூறும்போது, ’இதில் திருவிழாக்களில் பொம்மை கடை நடத்தும் தோனி குமார் என்ற கேரக்டரில் நடிக்கிறேன். தோனி பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் அளவுக்கு கிரிக்கெட் வெறியன். ரஜினி பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் ரஜினி ராதா ( நிக்கி கல்ராணி) , கிராமத்து பெரிய மனிதர் மகள் நதியா (பிந்து மாதவி)... எங்கள் மூன்று பேருக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள்தான் கதை. நம்மால் மறக்கப் பட்டு வரும் கிராமத்து வாழ்க்கையை பதிவு செய்யும் படமாக இது இருக்கும்’ என்றார் விக்ரம் பிரபு.