25 ஆண்டுகள் சினிமா பயணத்தில் ஒரே ஒரு நாளைத் தவிர படப்பிடிப்பை எந்த சூழலிலும் ரத்து செய்ததில்லை என்கிறார் பாலிவுட் நடிகை கஜோல்.
பிடிஐ-க்கு பாலிவுட் நடிகை அளித்த பேட்டியில், எனது 25 ஆண்டு கால சினிமா பயணத்தில் எனக்குத் தெரிந்து நான் படப்பிடிப்பை ரத்து செய்ததோ, தள்ளி வைத்ததோ இல்லை. இதை என்னால் நிச்சயமாகக் கூற முடியும். மேலும், நான் ஒருபோதும், விமானத்தை தவறவிட்டதில்லை. சினிமா துறையில் உள்ள அனைவரும், சரியான நேரத்திற்கு சாப்பிடுவதில்லை, தூங்குவதில்லை. அதனால் ஆரோக்கியம் மிக மோசமாக பாதிக்கப்படும்.
எனது மகள் நைசாவுக்கு ஒரு நாள் 104 டிகிரி காய்ச்சல் இருந்தது. என் சினிமா வாழ்க்கையில் அன்று ஒரு நாள் மட்டும்தான் படப்பிடிப்பை ரத்து செய்தேன் என்று நடிகையும், ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் விளம்பரத் தூதருமான கஜோல் கூறுகிறார்.