சினிமா

புற்றுநோயை எதிர்த்துப் போராடினேன்: மனிஷா கொய்ராலா நெகிழ்ச்சி

புற்றுநோயை எதிர்த்துப் போராடினேன்: மனிஷா கொய்ராலா நெகிழ்ச்சி

webteam

புற்றுநோயை எதிர்த்து போராடியதாக நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார். 

பாலிவுட் முன்னணி நடிகையான மனிஷா கொய்ராலா தமிழில் மணிரத்னம் இயக்கிய பம்பாய், ஷங்கர்  இயக்கிய முதல்வன், கமல்ஹாசனுடன் இந்தியன் ஆகிய படங்களில் நடித்தவர். இவர் புற்றுநோயால் அவதிப்பட்டு பெரும்போராட்டத்திற்கு பிறகு மீண்டு வந்திருக்கிறார். தற்போது சஞ்சய் தத் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் சஞ்சய் தத் கதாபாத்திரத்திற்கு தாயாராக நடித்து வருகிறார். 
புற்றுநோய் போராட்டம் குறித்து அவர் கூறுகையில், புற்று நோய் தாக்குவதற்கு முன்னால், என் வாழ்க்கை சிறந்ததாக இருந்ததில்லை. என்னுடைய வாழ்க்கையை மதிப்பு மிகுந்ததாக நான் கருதவில்லை. புற்றுநோய் வந்தபோது அதை எதிர்த்துப் போராடினேன். வாழ்க்கையை வாழ எப்போதும் போராடிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எதார்த்தமான உண்மையை உணர்ந்து போராடினேன். அதிக பணம் செலவழிக்கப்படுவது, மிகுந்த வேதனை, வலி ​​மற்றும் பயத்துடன் இருந்தேன். பிறகு மீண்டேன். அதனால்தான் நான் மக்களிடம் கூறுகிறேன், வாழ்க்கையை அனுபவித்து மகிழுங்கள். அதை மதிக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை நன்றாக இருக்கும். ஏனெனில் வாழ்க்கை என்பது பரிசு’ எனத் தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்ட இவர் சமீபத்தில் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.