சினிமா

'கோக், பெப்சி பயன்படுத்துவதில்லை': ஏ.ஆர்.முருகதாஸ்

'கோக், பெப்சி பயன்படுத்துவதில்லை': ஏ.ஆர்.முருகதாஸ்

webteam

அந்நிய நாட்டு குளிர்பானங்களை தமது படப்பிடிப்பு தளங்களுக்குள் பயன்படுத்த தடைவிதித்திருப்பதாக திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், கத்தி திரைப்படத்திற்கான பணிகளைத் தொடங்கிய போதே, கோக், பெப்சி குளிர்பானங்கள் பருகுவதைத் தாம் நிறுத்தி விட்டதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், கோக், பெப்சி பருகுவதைத் தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததை அடுத்து, பல்வேறு தரப்பிலும் அதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.