விமர்சனங்கள் பற்றி நான் கவலைப்படுவதில்லை என்று நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
விஜய் ஆண்டனியின் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள திரைப்படம் அண்ணாதுரை. இதுவரை இசையமைப்பாளர், நடிகர் என இருந்த விஜய் ஆண்டனி இந்தப் படத்தில் எடிட்டராகவும் அறிமுகமாகிறார். அதை பற்றி அவர் குறிப்பிடும்போது ‘நான் ஒரு சவுண்ட் எஞ்ஜினியர். எனக்கு எடிட்டிங் என்பது புதிதல்ல’என்று கூறினார்.
மேலும் அவர் “நான் விமர்சனங்களை மனதில் ஏற்றிக்கொள்வதில்லை. அதை பற்றி கவலைப்படுவதும் இல்லை. என்னுடைய எல்லை என்ன என்று எனக்குத் தெரியும். எனவே யாராவது குறைகளை சுட்டிக்காட்டினால் அது எனக்கு தெரியும். அது ஒரு விஷயமே இல்லை. அவர்கள் சொல்வது உண்மையாகலாம் அதற்காக நொந்துபோய் உட்கார்ந்துவிட மாட்டேன். அதற்காக நான் விமர்சனமே தவறானது என கூற மாட்டேன். அதை மனம் பாதிக்கும் அளவுக்கு எடுத்து கொள்ளக்கூடாது என்கிறேன். நீங்கள் உங்கள் வேலையை மட்டும் கடுமையாக செய்தால் விரைவில் ஒருநாள் உங்கள் பெஸ்ட்டை செய்ய முடியும்” என்று கூறினார்.