சினிமா

"விவேக் சாருக்கு நான் அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்று வைக்க இருக்கின்றேன்” - சிலம்பரசன்

"விவேக் சாருக்கு நான் அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்று வைக்க இருக்கின்றேன்” - சிலம்பரசன்

sharpana

”விவேக் சாருக்கு நான் அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்று வைக்க இருக்கின்றேன்” என்று நடிகர் விவேக் மறைவிற்கு சிலம்பரசன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 

அந்த அறிக்கையில், “அன்பு அண்ணன் நம் சின்னக் கலைவாணர் இன்முகம் மாறாத மனிதர்.எல்லோரிடமும் இயல்பாகப் பழகுபவர். என்ண்ற்ற மரக்கன்றுகளை நட்டு நட்டு காற்றுக்கு ஆக்சிஜனை சுவாசிக்கக் கொடுத்தவர் இன்று மூச்சற்றுவிட்டார் என்ற பெருந்துயரச்செய்தி கேட்டு அதிர்ந்து போனேன். சைக்கிளிங்,உடற்பயிற்சி, யோகா இசையென மிக ஆரோக்கியமான முன்னுதாரணமாக நான் ஆச்சர்யப்படும் மனிதர் விவேக் சார். தமிழ் சினிமாவில் எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் பகுத்தறிவு கருத்துக்களை போதித்து வந்தார். என்மீது மிகுந்த அக்கறை கொண்டவர்.

எப்போதும் என் நல்லது எடுக்கும் முயற்சிகள் பற்றி விசாரித்துக்கொண்டே இருப்பார். அவருக்கு நாம் செய்ய வேண்டியது, அவர் செய்து வந்ததை நாம் தொடர்ந்து செய்வதுதான் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும். நான் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்று வைக்க இருக்கின்றேன். சின்னக் கலைவாணரை நேசிக்கும் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்று நட்டு அவரது இதயத்துக்கு நெருக்கமான அஞ்சலியை செலுத்துவோம்” என்று உருக்கமுடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.