துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்து வெளியீட்டுக்கு தயாராகி வரும் படம் `ஐ அம் கேம்'. இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். RDX படத்தின் வெற்றிக்குப் பிறகு நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார் என்பதால் படத்தின் மீது பெரிய ஏதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்படம் பற்றி கூறிய துல்கர் சல்மான் "எனது திரை வாழ்க்கையில் இதுவரை நடித்திருக்கும் படங்களில் மிகவும் ஸ்டைலிஷான படமாக இப்படம் இருக்கும். படத்தின் உலகம் முழுவதும் நவீன மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது இயக்குநர் நஹாஸ் ஹிதாயத், தன்னை முற்றிலும் புதிய ஸ்டைலிஷ் அவதாரத்தில் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த படத்தை உருவாக்கியுள்ளார். சமீப காலங்களில் வெளியான எனது பல படங்களில் வின்டேஜ் தோற்றத்தில் நடித்திருந்தாலும், `ஐ அம் கேம்' திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட மற்றும் புத்துணர்ச்சியான தோற்றத்தில் ரசிகர்களை சந்திக்க இருக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
Wayfarer Films தயாரிப்பில், துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ள இந்தப் படம் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது பரபரப்பான இறுதிக்கட்ட பின்னணி பணிகளில் உள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்திய படமாக வெளியாகவுள்ளது. இந்த பிரம்மாண்ட ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் 2026 ஓணம் ஸ்பெஷலாக ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.