இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட சினிமா படங்களில் குத்துப்பாடல்கள் இன்று நிச்சயம். அந்தப் பாடல்கள் இல்லாமல் படங்கள் வெளிவருவது குறைவாகி விட்டது. ஹீரோயின்கள் ஆடை குறைத்து ஆடும் இந்தப் பாடல்களில் இரட்டை அர்த்தம் தொனிக்கும் வார்த்தைகள் இடம்பெறுவ தாக பலர் கூறி வருகின்றனர். அதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இருந்தும் அதுபோன்ற பாடல்கள் இடம்பெறுகின்றன.
இந்நிலையில் பிரபல இந்தி நடிகையும் சமூக செயற்பாட்டாளருமான ஷபானா ஆஸ்மி, இது போன்ற பாடல்களை எழுதுபவர்கள் யோசித்து எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் கூறும்போது, ‘பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை கொண்ட திரைப்படங்கள் இப்போது அதிகம் வெளிவரத் தொடங் கியிருக்கின்றன. ஆனால், ஐட்டம் சாங் எனப்படும் குத்துப்பாடல்களை படங்களில் இடம்பெறச் செய்வதற்கு எதிரானவள் நான்.
(ஷபானா)
அந்தப் பாடல்க ளுக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்பது தெரியவில்லை. இதுபோன்ற பாடல்கள் சினிமாவில் இடம்பெறத் தேவை யில்லை என்பதே என் கருத்து. அப்படியே இருந்தாலும் அந்தப் பாடல்களில் கண்ணியமான வார்த்தைகள் இடம்பெற வேண்டும். ஆனால், பெண்களை அவமானப்படுத்தும் வகையில் அவர்களை இழிவுப்படுத்தும் வகையில், வார்த்தைகள் இடம்பெறுகின்றன. இதை எழுதுபவர்கள் ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து எழுத வேண்டும்.’ என்று கூறியுள்ளார். இவரது கணவர் ஜாவேத் அக்தர், பிரபல பாடலாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.