நான் ஒரு பெரிய விஜய் ரசிகை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குளோபல் ஐகான் நடிகை ப்ரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
கடந்த 2002ல் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் சினிமா உலகத்திற்குள் அடியெடுத்து வைத்தவர் ப்ரியங்கா சோப்ரா. முன்னால் உலக அழகியான அவர் தமிழ் சினிமா மூலம்தான் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் அவருக்கு பாலிவிட் வாய்ப்பு கிடைத்து. அதன் பின் ஹாலிவுட் பக்கம் போய் சேர்ந்திருக்கிறார். ஆனாலும் அவர் அடிக்கடி சென்னையை எட்டி பார்ப்பது வழக்கம். சில வருடம் முன் சென்னை வந்த அவர் விஜய்யுடன் நடித்ததை இன்னும் மறக்கவில்லை. தமிழ் சினிமாவில் மறுபடியும் வாய்ப்பு வருமா என்று ஆர்வமாக காத்திருக்கிறேன். ஆனாலும் இங்குள்ள ஹீரோக்களுக்கு சமமாக நடனமாட வேண்டுமே என்று லேசான பயம் இருக்கிறது என பேசியிருந்தார்.
சில தினங்களாக மெர்சல் சர்ச்சை தேசிய அளவில் பூதாகரமாகியிருக்கும் நிலையில் ப்ரியங்கா தன் ட்விட்டர் பக்கத்தில் “ நான் அவரை விரும்புகிறேன். நான் ஒரு பெரிய விஜய் ரசிகை. மீண்டும் அவருடன் நடிக்க விருப்பமாக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். ப்ரியங்காவின் இந்த ட்விட்டால் மெய்மறந்து போய் இருக்கிறார்கள் விஜய்யின் சமூக வலைதள ரசிகர்கள்.