சினிமா

ரஷ்ய பாய்ஃப்ரெண்ட் உடன் கல்யாணமா?: ஸ்ரேயா விளக்கம்

ரஷ்ய பாய்ஃப்ரெண்ட் உடன் கல்யாணமா?: ஸ்ரேயா விளக்கம்

webteam

ரஷ்ய பாய்ஃப்ரெண்ட்டை நடிகை ஸ்ரேயா திருமணம் செய்ய இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமாக இருந்த நடிகை ஸ்ரேயா. நடிகர் ரஜினிகாந்துடன் ‘சிவாஜி’, நடிகர் விஜய்யுடன் ‘அழகிய தமிழ்மகன்’ என பல படங்களில் நடித்தவர்.ஒரு கட்டத்திற்கு மேல் பாலிவுட் வாய்ப்பு அவரை அழைக்க மும்பைவாசியானார் ஸ்ரேயா. சமீபகாலமாக கிரிக்கெட் வீரர் பிராவோ உடன் சேர்த்து இவரை பற்றி பல செய்திகள் வெளியாகின. 

தமிழ் சினிமாவில் பெரிய இடைவெளியை விட்டிருந்த ஸ்ரேயா மீண்டும் இப்போது அரவிந்த சாமியுடன் ‘நரகாசூரன்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்தியில் ‘தட்கா’வில் நடித்து கொண்டுள்ளார். 

இந்நிலையில் அவர் ரஷ்ய பாய்ஃப்ரெண்ட்டை வரும் மார்ச் மாதம் திருமணம் செய்ய இருப்பதாக செய்தி பரவியது. அதற்குப் பதிலளித்துள்ள ஸ்ரேயா, “ நான் இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை” என்று கூறியுள்ளார். மேலும் அவரது தாயார் “இல்லை. இதுபோன்ற எல்லா செய்திகளும் வதந்திதான். ஸ்ரேயா, ராஜஸ்தானில் நடைபெற்ற அவளுடைய நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்டார். அதற்காக புதிய உடைகளை, நகைகளை வாங்கி இருந்தார். இதுதான் உண்மை. வரும் மார்ச்சில் நடைபெற உள்ள இந்தக் கல்யாணத்திலும் உறவினர் கல்யாணம் ஒன்றிலும் கலந்து கொள்ள இருக்கிறார்.” என விளக்கம் அளித்துள்ளார்.