சினிமா

”உங்கள் கைகள்தான் எனக்கு தன்னம்பிக்கை தந்தது” : ஸ்ரீதேவி பற்றி ஹிருத்திக்

”உங்கள் கைகள்தான் எனக்கு தன்னம்பிக்கை தந்தது” : ஸ்ரீதேவி பற்றி ஹிருத்திக்

webteam

ஸ்ரீதேவி பற்றி பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் வெளியிட்ட ட்விட் மற்றும் புகைப்படம் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தியுள்ளது. 

தமிழ், இந்தி உள்ளிட்ட பலமொழிகளில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி, நேற்று முன்னதினம் காலமானார். அவரது மரணம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஸ்ரீதேவியின் சிறந்தக் காட்சிகளை சமூகவலைதளங்களில் அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.  

இந்நிலையில் பலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஸ்ரீதேவியை பற்றி அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளர். "நான் உங்களை விரும்புகிறேன். உங்களின் நடிப்பைக் கண்டு பெருமை அடைகிறேன். எனது சிறுவயது முதல் ஷூட்டிங் உங்களுடன்தான் நடந்தது. உங்கள் கரங்களைப் பிடித்து குலுக்கியதை  நான் நினைத்து பார்க்கிறேன்.