கிடாவோ சகுராய் இயக்கத்தில் நோவா சென்டினியோ, ஆண்ட்ரூ கோஜி, ஜேசன் மோமோவா நடித்த ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ ஹாலிவுட் படத்தில், ‘துப்பாக்கி’, ‘மதராஸி’ பட வில்லன் வித்யுத் ஜமால் குரு தல்சிம் ஆக நடிக்கிறார். 1993 பின்னணியில் ரியூ, கென் மாஸ்டர்ஸ் மீண்டும் போர்க்களத்தில் களமிறங்கும் கதையாக உருவான இந்த வீடியோ கேம் அடிப்படையிலான படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, இந்தியாவில் 2026 அக்டோபர் 16 அன்று வெளியீடு பெறுகிறது.
கிடாவோ சகுராய் (Kitao Sakurai) இயக்கத்தில் நோவா சென்டினியோ (Noah Centineo), ஆண்ட்ரூ கோஜி (Andrew Koji), ஜேசன் மோமோவா (Jason Momoa) உட்பட பலர் நடித்துள்ள படம் 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்'. இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகரும், `துப்பாக்கி', `மதராஸி' படங்களில் வில்லனாக நடித்த வித்யுத் ஜமால் குரு தல்சிம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Street Fighter என்ற வீடியோ கேமை மையமாக வைத்து அதே பெயரில் உருவாகியுள்ளது இப்படம். 1993 ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட இந்தக் கதையில், பிரிந்துபோன போர்வீரர்களான ரியூ (ஆண்ட்ரூ கோஜி) மற்றும் கென் மாஸ்டர்ஸ் (நோவா சென்டினியோ) மீண்டும் போர்க்களத்தில் களமிறங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. மர்மம் நிறைந்த சுன்-லி (கலினா லியாங்), அடுத்த வேர்ல்ட் வாரியர் டோர்னமென்ட்டில் பங்கேற்க அவர்களை அழைக்கிறார்.
விதி மற்றும் கோபத்துடன் மோதும் இந்த கொடூரமான போட்டியின் பின்னால் உயிருக்கு ஆபத்தான ஒரு சதித்திட்டம் மறைந்துள்ளது. அது ரியூ மற்றும் கெனை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிற்கவும், தங்களின் கடந்தகால இருண்ட நினைவுகளை எதிர்கொள்ளவும் கட்டாயப்படுத்துகிறது என்பதே கதை. இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பாரமவுண்ட் ஸ்டுடியோஸ் இந்தியா நிறுவனம் 2026 அக்டோபர் 16 அன்று 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' திரைப்படத்தை இந்திய திரையரங்குகளில் வெளியிடுகிறது.