மார்வல் படங்களில் ஸ்பைடர்மேன் பட வரிசைக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு. Tobey Maguire, Andrew Field ஆகியோரைத்த தொடர்ந்து ஸ்பைடர்மேன் ரோலில் தற்போது நடித்து வருபவர் டாம் ஹாலண்ட். 2017ல் வெளியான `Spider-Man: Homecoming' படத்தில் ஸ்பைடர்மேன் ஆக அறிமுகமான டாம் ஹோலன்ட், தொடர்ச்சியாக `Spider-Man: Far From Home', `Spider-Man: No Way Home' போன்ற படங்கள், MCU படங்களான `Avengers: Infinity War', `Avengers: Endgame', `Venom: Let There Be Carnage' போன்ற படங்களிலும் ஸ்பைடர்மேனாக நடித்தார்.
தற்போது `Spider-Man: Brand New Day' படம் MCU Spider-Man film seriesல் நான்காவது பாகமாக Destin Daniel Cretton இயக்கத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தில் டாம் ஹாலண்ட் உடன் Zendaya, Jacob Batalon, Sadie Sink, Jon Bernthal, Mark Ruffalo ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு Leavesden Studios in Watfordல் நடைபெற்று வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) படப்பிடிப்பின் போது நடிகர் டாம் ஹாலண்ட் -க்கு விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
படப்பிடிப்பில், Stunt காட்சிகளை படமாக்கும்போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் டாம் ஹாலண்ட்-க்கு, Mild Concussion (தலையில் ஏற்படும் ஒரு தற்காலிக காயம்) ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. டாம் ஹோலன்ட் -ஐ தவிர வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், டாம் தற்போது ஓய்வில் இருக்கும் காரணத்தால் படப்பிடிப்புகளில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் முழுமையாக குணமடைந்து படப்பிடிப்புக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Shang-Chi and the Legend of the Ten Rings திரைப்படத்தை இயக்கிய Destin Daniel Cretto தான் டாம் நடிக்கும் `Spider-Man: Brand New Day' படத்தை இயக்கி வருகிறார். இப்படம் 2026 ஜூலை 31 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர அதிக எதிர்பார்ப்பில் உருவாகி வரும் கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் `The Odyssey' படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் டாம் ஹாலண்ட்.