Tom Holand, Zendaya Marriage
ஹாலிவுட் செய்திகள்

டாம் ஹாலண்ட் - ஜெண்டாயா திருமணம்? மொபைலுக்கு தடை, 6 கோடி செலவு! | Tom Holand | Zendaya | Marriage

இந்த தம்பதி ஆகஸ்ட் 4 அன்று, இங்கிலாந்தின் சர்ரேயில் உள்ள ஐந்து நட்சத்திர மாளிகையான பீவர்புரூக் ஹோட்டலில் தங்கள் திருமண கொண்டாட்டத்தை நடத்தி உள்ளனர் என சொல்லப்படுகிறது.

Johnson

ஹாலிவுட்டின் பிரபல நட்சத்திர தம்பதி டாம் ஹாலண்ட் - ஜெண்டாயா. சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ட்ரெண்டிங் ஆகும் இந்த ஜோடி, தங்களது திருமணக் கொண்டாட்டத்தை விமரிசையாக நடத்தியுள்ளதுதான் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது. டாம் ஹாலண்டும் ஜெண்டாயாவும் முதன்முதலில் 'ஸ்பைடர்-மேன்: ஹோம் கமிங்' திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது சந்தித்தனர்; அதில் அவர்கள் பீட்டர் பார்க்கர் மற்றும் எம்.ஜே. கதாபாத்திரங்களில் நடித்தனர். பல ஆண்டுகளாக அவர்களைக் காதல் வதந்திகள் சூழ்ந்திருந்தபோதிலும், அந்த ஜோடி தங்களை நெருங்கிய நண்பர்கள் என்றே தொடர்ந்து கூறிவந்தனர்.

Marriage

2025 ஜனவரியில் நடைபெற்ற கோல்டன் குளோப் விருது விழாவில், ஜெண்டாயா ஒரு பெரிய வைர மோதிரத்தை அணிந்து கலந்துகொண்டபோது திருமணம் குறித்த யூகங்கள் தீவிரமடைந்தன. சிறிது காலத்திற்குப் பிறகு, அந்த ஜோடிக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என பரபரத்தது ஹாலிவுட் வட்டாரம். சில பிரபலங்களும் அந்தத் தம்பதியினர் ஏற்கெனவே திருமணம் செய்துகொண்டார்கள் எனவும் பேட்டிகளில் தெரிவித்தனர். 2026 ஆஸ்கர் விருது விழாவில் ஜெண்டாயா திருமண மோதிரம் போன்ற ஒன்றை அணிந்து வந்தது அந்தச் செய்திகளுக்கு வலு சேர்ப்பதுபோல அமைந்தது.

ஆன்லைனில் பரவி வந்த AI-ல் உருவாக்கப்பட்ட திருமணப் புகைப்படங்கள் போலி என ஒரு பேட்டியில் போலிப் புகைப்படங்கள் குறித்த தனது குடும்பத்தினரின் எதிர்வினையை நினைவுகூர்ந்த ஹாலண்ட், தம்பதியரின் உண்மையான திருமணத்தில், "அவர்கள் அனைவரும் இருந்ததால்" தனது உறவினர்கள் ஏமாறவில்லை என்று நகைச்சுவையாகக் கூறினார். சமீபத்தில் மெக்சிகோ சிட்டியில் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படத்தை விளம்பரப்படுத்தும்போது, ஜெண்டாயா சொன்ன ஒரு விஷயம் அவருக்கு திருமணம் ஆனதை உறுதி செய்வதைப்போல அமைந்தது. ஒரு ரசிகர் அவரிடம் கேலியாகத் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டபோது, ஜெண்டாயா சிரித்துக்கொண்டே, "நீங்கள் மிகவும் தாமதமாக வந்துவிட்டீர்கள்" என்று பதிலளித்தார். இதன்மூலம் அவரும் ஹாலண்டும் ஏற்கெனவே திருமணம் செய்துகொண்டதை உறுதி செய்து பலரும் பேசினார்கள்.

Tom Holand, Zendaya

தற்போது இந்த தம்பதி ஆகஸ்ட் 4 அன்று, இங்கிலாந்தின் சர்ரேயில் உள்ள ஐந்து நட்சத்திர மாளிகையான பீவர்புரூக் ஹோட்டலில் தங்கள் திருமணக் கொண்டாட்டத்தை நடத்தி உள்ளனர் எனச் சொல்லப்படுகிறது. தென்மேற்கு லண்டனில், ஹாலண்டின் சொந்த ஊரான கிங்ஸ்டனில், தேம்ஸ் அருகே அமைந்துள்ள அந்த ஹோட்டல்தான் இது. தம்பதியரின் நெருங்கிய குடும்பத்தினரும் நண்பர்களும் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. Natural themeல் நடந்த இந்த நிகழ்வில், சுமார் 250 விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர். உயர்தர பாதுகாப்பு, ஆடம்பர விருந்து, தனியார் தங்குமிடம் என தடபுடலாக கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. இதில் முக்கியமான விஷயமே இதில் கலந்துகொள்ளும் யாரும்  மொபைல் போன் கொண்டு வரக்கூடாது என ஸ்ட்ரிக்ட் ரூல் போட்டிருக்கிறார்கள். பிரிட்டிஷ் பத்திரிகையான The Sun வெளியிட்ட தகவலின்படி, இந்த திருமணக் கொண்டாட்டத்திற்கான செலவு சுமார் £500,000 (5 லட்சம் பவுண்டுகள்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ₹5.8 கோடி முதல் ₹6 கோடி வரை இருக்கும். இந்த ஸ்பைடர்மேன் ஜோடிக்கு இந்தியாவிலும் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. எனவே இந்த திருமணச் செய்தி கேள்விப்பட்டதில் இருந்து, இந்திய முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றால் எப்படி இருக்கும் என ஒரு ஏஐ வீடியோவை உருவாக்கி. அதில் மார்வெல் பாத்திரங்கள் அனைவரும் திருமண வீட்டினராக்கி வெளியிட்டிருக்கிறார்கள்.  டாம் ஹாலண்ட் - ஜெண்டாயாவின் திருமண செய்திபோல அந்த வீடியோவும் வைரலாகி இருக்கிறது.