90ஸ் கிட்ஸ்களின் மறக்கமுடியாத திரைப்படம் `தி மம்மி'. ஒரு படம் என்பதை தாண்டி, Pop Culture References என்றே சொல்லலாம். இந்த மம்மி மீண்டும் உயிர்த்தெழ இருக்கிறது என்பதே இப்போதைய அப்டேட்.
1999ல் வெளியான `தி மம்மி' மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து, 2001ல் அதன் சீக்குவல் படமாக `The Mummy Returns' வெளியாகி வரவேற்பைப் பெற்றது. The Mummy Returns படத்திலிருந்து The Scorpion King என்ற பாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதே பெயரில் ஒரு spin-off 2002ல் வெளியானது. அதற்கும் ஓரளவு வரவேற்பு கிடைத்தது.
மம்மியின் மூன்றாவது பாகமாக உருவாக்கி 2008ல் வெளியான `The Mummy: Tomb of the Dragon Emperor' படம் அதன் முந்தைய பாகங்களை விட குறைவாகவே வசூலித்தது. அதன் பின்பு சில வருடங்கள் மம்மியை தொந்தரவு செய்யாமலிருந்த ஹாலிவுட், 2017ல் மீண்டும் மம்மியை தோண்டி எடுக்க ஆரம்பித்தது. டாம் க்ரூஸ் என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தை நடிக்க வைத்து `The Mummy' படத்தின் ரீ-பூட் வெர்ஷன் வெளியானது. மாபெரும் தோல்விப்படமாகவே அது அமைந்தது.
இப்போது மீண்டும் மம்மி ஞாபகம் ஹாலிவுட்டுக்கு வந்திருக்கும் போல. ரீபூட் படமாக இல்லாமல், The Mummy பட வரிசையின் நான்காவது பாகமாக உருவாக்க உள்ளதாம். முதல் பாகத்தில் Brendan Fraser மற்றும் Rachel Weisz என்ற முதன்மை பாத்திரங்களில் நடித்த Rick O'Connell மற்றும் Evelyn Carnahan ஆகியோரை இந்த பாகத்திலும் இடப்பெற செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. Devil's Due, Ready or Not, Scream உள்ளிட்ட படங்களை இயக்கிய Matt Bettinelli-Olpin மற்றும் Tyler Gillett இந்த பாகத்தை இயக்க உள்ளனராம்.