Priyanka Chopra web
ஹாலிவுட் செய்திகள்

ஆஸ்கரில் மீண்டும் ப்ரியங்கா சோப்ரா... வெளியான பெயர் பட்டியல்! | Priyanka Chopra | Oscars

16 பிரிவுகளில் நாமினேட் ஆகி உள்ள `சின்னர்ஸ்' படத்திற்கு நிறைய ஆஸ்கர் விருதுகள் கிடைக்கும் என சொல்கின்றனர் சினிமா ஆர்வலர்கள். மேலும் ஒரே படம் 16 விருதுகளுக்கு நாமினேட் ஆகி உள்ளது இதுவே முதல் முறை.

Johnson

98வது ஆஸ்கர் விழாவில் ப்ரியங்கா சோப்ரா மீண்டும் Presenters பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 2016ல் நடந்த 88வது ஆஸ்கர் விழாவில் ப்ரியங்கா சோப்ரா Presenters ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு 25 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. 'சின்னர்ஸ்' படம் 16 பிரிவுகளில் நாமினேட் ஆகி, அதிக விருதுகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 15ம் தேதி லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மார்ச் 16 காலை 4.30 மணியிலிருந்து 7.30 வரை இந்த நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பாகும். இதுவரை 24 பிரிவுகளின் கீழ் கொடுக்கப்பட்டு வந்த விருதுகள், இந்தாண்டு Best Casting என்ற பிரிவும் சேர்க்கப்பட்டு 25 விருதுகள் வழங்கப்பட உள்ளது.

இதற்கான நாமினேஷன் பட்டியல் ஜனவரி மாதமே அறிவிக்கப்பட்டுவிட்டது. இதில் 16 பிரிவுகளில் நாமினேட் ஆகி உள்ள `சின்னர்ஸ்' படத்திற்கு நிறைய ஆஸ்கர் விருதுகள் கிடைக்கும் என சொல்கின்றனர் சினிமா ஆர்வலர்கள். மேலும் ஒரே படம் 16 விருதுகளுக்கு நாமினேட் ஆகி உள்ளது இதுவே முதல் முறை. கடந்த ஆண்டு ஆஸ்கரை தொகுத்து வழங்கிய Conan O'Brien தான், இந்தாண்டும் நிகழ்வை தொகுத்து வழங்குவார் என சொல்லப்படுகிறது.

தற்போது மேடையில் வந்து விருது பெற்ற வெற்றியாளர்களை `And the Oscar Goes To...' என சொல்லி அறிவிப்பதும், விருதுகளை வழங்கும் Presenters யார் என்பதையும் அறிவித்துள்ளது ஆஸ்கர். ADRIEN BRODY, ZOE SALDAÑA, CHRIS EVANS, DEMI MOORE, KUMAIL NANJIANI, ROBERT DOWNEY JR., ANNE HATHAWAY எனப் பலரும் இந்த நிகழ்வில் Presenters ஆக வரவுள்ளனர். இதில் இந்திய நடிகை ப்ரியங்கா சோப்ரா ஜோன்ஸ் பெயரும் இடம்பெற்றுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன் 2016ல் நடந்த 88வது ஆஸ்கர் விருதுகளிலும் ப்ரியங்கா சோப்ரா Presenters ஆக தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2023லில் இருந்து ஆஸ்கர் மெம்பர்களில் ப்ரியங்கா சோப்ராவும் ஒருவராக இருந்து வருகிறார்.